×

அரியலூர் அருகே பழுப்பு நிலக்கரி திட்டத்திற்காக கையகப்படுத்திய நிலங்களுக்கு கூடுதல் விலை வழங்க வேண்டும்

அரியலூர், டிச.18:  ஜெயங்கொண்டம் பழுப்பு நிலக்கரி திட்டத்திற்காக கையக்கப்படுத்திய நிலத்திற்கு 25 மடங்கு கூடுதல் விலை வழங்க வேண்டும் என்று  அரியலூர் மாவட்ட கலெக்டரிடம் கிராம மக்கள் மனு அளித்தனர். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பழுப்பு நிலக்கரி திட்டத்திற்காக நிலங்கள் கையக்கப்படுத்தப்பட்டது. ஆனால் அந்த இடத்தில் எந்தவித நிறுவனமும் கட்டவில்லை. நிறுவனம் அமைத்தல் தங்களுக்கு வேலை கிடைக்கும் என்று ஆவலில் இருந்த கிராம மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இதனையடுத்து குறைந்த விலைக்கு விற்ற நிலத்திற்கு  இன்றைய மார்க்கெட் மதிப்பு விலை வேண்டி அரசுக்கு பலமுறை கோரிக்கை மனு அனுப்பியும் இதுவரை எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை.

ஆனால், தற்போது 20 ஆண்டுகளுக்கு முன்பு கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கு இன்றைய தேதியில் வழிகாட்டு மதிப்பை இழந்து வருவதாக அரசு சொல்வது விவசாயிகள் மத்தியில் மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.எனவே விவசாயிகளுக்கு குறைந்த பட்சம் ஒரு ஏக்கருக்கு 8 லட்ச ரூபாய் முதல் 10 லட்ச ரூபாய் வரை முன்பு வழங்கிய இழப்பீடு வழங்கியதோடு அதிலிருந்து சுமார் 25 மடங்கு அதிகமாக வழங்க வேண்டும் என்று கேட்டு நேற்று நடந்த மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட  கலெக்டர் விஜயலெட்சுமியிடம் கிராம மக்கள் மனு வழங்கினர்.

Tags : land ,Ariyalur ,
× RELATED தனியார் தோட்ட வன நிலம் ஆக்கிரமிக்க...